உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டமாக மாற வேண்டும் Sasikanth Senthil protest indefinite fasting

இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டமாக மாற வேண்டும் Sasikanth Senthil protest indefinite fasting

திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் இன்று திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார். திருவள்ளூரில் உள்ள தனது அலுவலக வளாகத்திலேயே அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 2152 கோடி ரூபாய் கல்வி நிதியை வழங்கக்கோரி உண்ணாவிரதத்தை துவங்கியுள்ளதாக சசிகாந்த் செந்தில் கூறினார். இந்த பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வைத் தரும்வரை போராட்டத்தைவிட மாட்டேன் என அவர் திட்டவட்டமாக கூறுகிறார். தமிழக மாணவர் நலனை காக்கும் இந்த போராட்டத்தில் அனைவரும் இணையவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆக 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி