உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சவுதியில் 42 இந்தியர்கள் பலி-புனித பயணத்தில் ஷாக் umrah pilgrims | saudi arabia bus-tanker collision

சவுதியில் 42 இந்தியர்கள் பலி-புனித பயணத்தில் ஷாக் umrah pilgrims | saudi arabia bus-tanker collision

உம்ரா புனித பயணம் செய்த இந்தியர்கள் 42 பேர் சவுதி அரேபியாவில் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மெக்கா பயணத்தை முடித்துக்கொண்டு, மதீனா நோக்கி சொகுசு பஸ்சில் இந்தியர்கள் சென்று கொண்டு இருந்தனர். Mufrihat என்ற இடத்தில் சென்ற போது, பஸ் மீது எதிர்பாராத விதமாக டீசல் டேங்கர் லாரி மோதியது. இதில் பஸ் நொறுங்கியது. உள்ளே இருந்த 42 பேர் பலியானார்கள். முதல் கட்ட தகவலில் இறந்தவர்கள் பெரும்பாலானோர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 20 பெண்கள், 11 குழந்தைகள் இந்த விபத்தில் பலியாகி இருக்கின்றனர். இந்த பயங்கர விபத்து இந்தியா முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தை மத்திய அரசும், தெலங்கானா அரசும் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்யும்படி கேட்டு இருக்கின்றனர். விபத்தில் இறந்த 42 பேரின் சடலங்களையும் பத்திரமாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோர சம்பவத்துக்கு நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்தார். ‛சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் இந்தியர்கள் பலியானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரியாத்தில் உள்ள நம் தூதரகம், ஜெட்டாவில் உள்ள துணை தூதரக அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ஜெய்சங்கர் கூறி உள்ளார். #UmrahPilgrims #SaudiArabia #BusTankerCollision #SaudiNews #Umrah #TravelNews #RoadAccident #Pilgrimage #SafetyFirst #CommunitySupport #EmergencyResponse #PrayersForPilgrims #TrafficAccident #HolyTravel #MiddleEastNews #BreakingNews #TravelSafety #InMemoriam #BREAKING

நவ 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ