நெருக்கடியை பயன்படுத்த எதிர்கட்சிகள் திட்டம் savukku shankar|Tiruvallur|Sasikanth Senthil
திருவள்ளூர் தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். இவர், சவுக்கு மீடியா என்ற யு டியூப் சேனல் நடத்தும் சங்கரின் சகோதரி கணவர். தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து வருபவர் சங்கர். திமுக முக்கிய தலைவரின் குடும்பத்தினரையும், அட்டாக் செய்து செய்திகளை வெளியிட்டு வருகிறார். இது அரசுக்கும், அமைச்சர்களுக்கும், தி.மு.க., நிர்வாகிகளுக்கும் அரசியல் ரீதியில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்த விபரம் தெரிந்தோ, தெரியாமலோ அவரது மச்சான் சசிகாந்த் செந்திலை திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் ஆக்கியுள்ளது காங்கிரஸ். சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக விளையாட்டு அமைச்சர் உதயநிதியும் பிரசாரம் செய்துள்ளார்.