பெரம்பலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | School Students | Pocso
பெரம்பலூரை சேர்ந்த 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் இருவர் கிரிக்கெட் கிரவுண்டில் இருந்தனர். அந்த வழியாக டூவிலரில் வந்த கிருஷ்ணகுமார் என்பவர் நான் இலவசமாக டியூசன் நடத்துகிறேன். என்னுடன் வந்தால் உதவித்தொகையுடன் படிக்கலாம் என கூறியுள்ளார். அட்மிஷன் போட்டதும் உதவி தொகை கிடைக்கும் என உறுதியாக சொன்னாராம். இதை நம்பிய மாணவர்கள் இருவரும் அவருடன் டூவீலரில் சென்றனர். கிருஷ்ணகுமார் அவர்களை கீழக்கணவாயில் உள்ள தனது ரூமுக்கு அழைத்து சென்றுள்ளார். வெளியில் ஜென்டில்மேன் போல பேசிய அவர் ரூமுக்கு சென்றதும் சுரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளார். கதவை உள் பக்கமாக பூட்டிவிட்டு மாணவர்களின் ஆடையை கழற்ற சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார்.
செப் 13, 2024