ஆசிரியர் மீதான புகாரில் மாணவர்கள் சொன்ன ஷாக் தகவல் | Harassment against students| Government school
மாணவர்களிடம் சில்மிஷம் விவகாரத்தில் சிக்கிய வேதியியல் ஆசிரியர் நாமக்கல் மாவட்டம், விட்டம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் வேதியியல் ஆசிரியர் வேலுச்சாமி. கடந்த 10 ஆண்டுகளாக இங்கு பணியாற்றுகிறார். இவர், மாணவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக புகார் எழுந்தது. முதலில் யாரும் இதை பெரிதாக கண்டுகொள்ளாத நிலையில், 7 மாணவர்கள் தலைமை ஆசிரியர் பாஸ்கரனிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். பள்ளிக்கு வரும் ஆண் மாணவர்களை தனியாக அழைத்து சட்டையை கழட்டச் சொல்வது, உடலில் தகாத இடங்களில் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குற்றம் சாட்டினர். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கும் போன் மூலம் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டார். குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர், மாவட்ட கல்வி அலுவலர், விஏஓ ஆகியோர் மாணவர்களிடம் தனித்தனியாக விசாரித்தனர். பெற்றோர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மாணவர்கள் அளித்த வாக்குமூலத்தை, கலெக்டருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில், ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பாய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.