உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு பச்சை துரோகம் | Seeman | Chief Coordinator | Naam Tamilar Katchi|

வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு பச்சை துரோகம் | Seeman | Chief Coordinator | Naam Tamilar Katchi|

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதித்துள்ள மக்களின் தலையில் மேலும் ஒரு பேரிடியாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 3வது முறையாக மின்கட்டணத்தை உயர்த்துவது வாக்களித்து அதிகாரம் வழங்கிய மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோன்மை. ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, சுங்க கட்டண உயர்வால் ஏழை மக்கள் வாங்கும் திறனை முற்றிலும் இழந்து அல்லல்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது திமுக அரசின் சிறிதும் மனசாட்சியற்ற செயல்.

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி