உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வருண்குமார் வழக்கில் மீண்டும் ஆஜராகாத சீமானுக்கு நீதிபதி கேள்வி | Seeman | NTK | Trichy Court

வருண்குமார் வழக்கில் மீண்டும் ஆஜராகாத சீமானுக்கு நீதிபதி கேள்வி | Seeman | NTK | Trichy Court

தன்னைப் பற்றியும், தனது குடும்பம் பற்றியும் அவதூறாக பேசியதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஐஜி வருண்குமார் திருச்சி குற்றவியல் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஏப்ரல் 29ல் நடந்த விசாரணையின் போது நீதிபதி விஜயா முன் டிஐஜி வருண்குமார் தனது வக்கீலுடன் ஆஜரானார். சீமான் தரப்பு வாதங்கள் எழுத்துப்பூர்வமாக நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், சீமான் ஆஜராகவில்லை. அப்போது சீமானின் வக்கீல் மட்டும் ஆஜரானார். வழக்கின் விசாரணையை மே மாதத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் சீமான் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அடுத்த முறை சீமான் ஆஜர் ஆவார் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி