உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உபரி வெளியேற்றப்படுவதால் கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

உபரி வெளியேற்றப்படுவதால் கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 24 மணிநேரத்தில் 141 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஏரிக்கான நீர் வரத்து வினாடிக்கு 6498 கன அடியாக அதிகரித்துள்ளது. மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 23 அடியை கடந்துவிட்டது. இதனால் ஏரியில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பின்னர் அது 3500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை