திமுக, பாஜவை அலறவிட்ட விஜய்... முந்தியது எப்படி? | Sengottaiyan Joining TVK | TVK Vijay | DMK vs BJP
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார் செங்கோட்டையன். கிட்டத்தட்ட 2 மணி நேரம் பேச்சு நடந்தது. இன்று காலை 10 மணிக்கு பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைகிறார். அதிமுகவை சேர்ந்த கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் அமைச்சர், மதுரை மாவட்ட முன்னாள் அமைச்சர், ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர் என முக்கிய தலைவர்கள் சிலரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. #SengottaiyanJoiningTVK #ADMKcrisis #TVKVijay #TVKMeetingToday #TNElection2026 #DMKvsBJP #TamilNaduPolitics #ADMK #TVK #PoliticalUpdate #ElectoralNews #TamilPolitics #2026Elections #DMK