உஸ்மான் ஹாடி சம்பவத்தில் பகீர் திருப்பம் | sharif osman hadi | Bangladesh | ind vs pak | yunus govt
வங்கதேசத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. பிப்ரவரி மாதம் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாணவர் அமைப்பின் முக்கிய தலைவராக இருந்த உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப்பட்ட பிறகு இந்த கலவரம் தீவிரம் அடைந்து விட்டது. இதன் தொடர்ச்சியாக அப்பாவி இந்து இளைஞர் தீபு தாஸ் கொல்லப்பட்டார். நடுரோட்டில் அவரது சடலத்தை தீ வைத்து கொளுத்தினர். இன்னொரு பக்கம் இந்து குடும்பத்தினர் வசித்த வீட்டுக்கு தீ வைத்தனர். நல்ல வேளையாக வீட்டின் பின் பக்கம் உள்ள வேலியை பிரித்துக்கொண்டு குடும்பத்தினர் உயிர் தப்பினர். இஸ்லாமுக்கு எதிராகவும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் இந்துக்கள் கலவரத்தை தூண்டுவதாக வேண்டும் என்றே பொய் குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர். மாணவர் அமைப்பின் தலைவர் உஸ்மான் ஹாடி கொலையின் பின்னணியில் இந்துக்களும் இந்தியாவும் இருப்பதாக பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கலவரத்தை தூண்டி விடுகின்றன. இதுதான் வங்கதேசத்தில் இப்போது நடக்கும் கலவரத்துக்கு முக்கிய காரணம். இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் எதிரான வெறுப்பு கோஷங்கள் ஒலிப்பதற்கும் இதுவே காரணம். இந்த நிலையில் தான் இடைக்கால தலைவர் முகமது யூனுசின் அரசாங்கத்தின் உண்மை முகத்தை கிழித்தெறியும் அதிர்ச்சி உண்மை வெளியாகி உள்ளது. அதாவது, உஸ்மான் ஹாடி கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இந்த கொலை செய்ததே யூனுஸ் அரசாங்கம் தான் என்று அதிர்ச்சி குண்டை வீசி உள்ளார் உஸ்மான் ஹாடியின் தம்பி ஷெரீப் ஓமர் ஹாடி. ஷாபாகில் தேசிய அருங்காட்சியகம் முன் நடந்த தியாகிகள் உறுதிமொழி நிகழ்ச்சியில் பேசிய அவர், யூனுஸ் அரசாங்கத்தை பார்த்து, ‛உஸ்மான் ஹாடியை கொலை செய்ததே நீங்கள் தான். இந்த சம்பவத்தை ஒரு பிரச்னையாக பயன்படுத்தி தேர்தலை சீர்குலைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றார். ‛இந்த கொலையில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள அரசாங்கம் தவறி விட்டது. உஸ்மான் ஹாடிக்கு நீதி கிடைக்காவிட்டால், நீங்களும் ஒரு நாள் வங்கதேசத்தை விட்டு ஓட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று உஸ்மான் ஹாடி தம்பி சொன்னார். நடக்க இருக்கும் பார்லிமென்ட் தேர்தலில் டாக்கா-8 தொகுதி சுயேச்சை வேட்பாளராக உஸ்மான் ஹாடி களம் இறங்கி இருந்தார். அவர் இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் எதிராக பகிரங்கமாக பேசி வந்த நிலையில் தான் கொல்லப்பட்டார். இதனால் தான் எளிதாக இந்தியா மீது பழி போட்டு விட்டனர். இப்போது யூனுஸ் அரசாங்கம் தான் இந்த கொலையை செய்தது என்ற தகவலை உஸ்மான் ஹாடியின் தம்பியே கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #DipuDas #BangladeshIssue #IndiaVsBangladesh #BangladeshPolitics #SouthAsia #Tensions #RegionalConflict #Diplomacy #NewsAnalysis #CurrentAffairs #PoliticalDebate #SoutheastAsia #InternationalRelations #CinematicReport #CrisisPoint #GlobalOutlook #VoicesOfBangladesh #StrategicDiscussion #BilateralRelations