இந்தியாவில் தஞ்சமடைந்த பின் விதிக்கப்பட்ட முதல் தண்டனை Sheikh Hasina| Jail sentence| bangladesh| ICT
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. முகமது கோலம் மோர்டுசா மொஜும்தர்(Md Golam Mortuza Mozumder) தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. இதே வழக்கில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவை சேர்ந்த ஷகில் அகந்த் புல்புல் என்பவருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹசீனா- புல்புல் இருவரும் பேசியதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஆடியோ லீக் ஆனதுதான் இந்த வழக்கின் அடிப்படை. அந்த ஆடியோவில் என் மீது 227 பேர் வழக்கு போட்டு இருக்கிறார்கள். எனவே அந்த 227 பேரை கொல்லும் உரிமம் எனக்கு கிடைத்து இருக்கிறது என்று ஹசீனா கூறியுள்ளதாக தெரிகிறது.