நிலங்களை ஒப்படைக்க சித்தராமய்யா மனைவி முடிவு karnataka CM | Wife Parvathi | Decesion | 14 plots
கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவின் மனைவி பார்வதிக்கு அவருடைய சகோதரர் தானமாக தந்த நிலத்தை முடா என்கிற மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் அரசு திட்டத்துக்கு எடுத்துக்கொண்டது. அதற்கு பதிலாக பல மடங்கு விலை கொண்ட 14 வீட்டு மனைகள் பார்வதிக்கு தரப்பட்டன. இதில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் குற்றம் சாட்டின. முதல்வர் சித்தராமய்யா மீது வழக்கு பதிவு செய்ய கவர்னர் தாவர் சந்த் கெலாட் உத்தரவிட்டார். அவரை தொடர்ந்து சிறப்பு நீதிமன்றமும் உத்தரவிட்டது. அதையடுத்து மைசூரு லோக் ஆயுக்தா போலீஸ் முதல்வர் சித்தராமய்யா, அவர் மனைவி பார்வதி, பார்வதியின் சகோதரர் மல்லிகார்ஜூன சுவாமி மற்றும் நிலத்தின் முன்னாள் உரிமையாளர் தேவராஜ் மீது வழக்கு பதிவு செய்தது. இதனால் சித்தராமய்யா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்தன.