/ தினமலர் டிவி
/ பொது
/ போலீஸ் வழக்கு பதிந்த நிலையில் மனோ மகன் தலைமறைவு! Singer Mano Sons | Assault case
போலீஸ் வழக்கு பதிந்த நிலையில் மனோ மகன் தலைமறைவு! Singer Mano Sons | Assault case
சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன், மதுரவாயலை சேர்ந்த 16 வயது சிறுவன், வளசரவாக்கத்தில் உள்ள கால்பந்து அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று இரவு பயிற்சி முடிந்ததும் இருவரும், அருகில் உள்ள உணவகத்துக்கு சென்றுள்ளனர். அந்த உணவகம் பிரபல பின்னணி பாடகர் மனோ வீட்டின் அருகே உள்ளது. வீட்டின் முன் மனோவின் மகன்களான ரபிக், சாஹீர் மற்றும் அவர்களது 3 நண்பர்கள் நின்று கொண்டிருந்தனர். உணவகத்துக்கு சென்ற சிறுவன் மனோ வீட்டையே முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மனோவின் மகன்களும், அவரது நண்பர்களும் சிறுவனை அழைத்து கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
செப் 11, 2024