உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ொழிற்சாலையை அடித்து நொறுக்கி கிராம மக்கள் சாலைமறியல்! SIPCOT Factory | Chemical | Air Pollution |

ொழிற்சாலையை அடித்து நொறுக்கி கிராம மக்கள் சாலைமறியல்! SIPCOT Factory | Chemical | Air Pollution |

கடலூர் சிப்காட்டில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு ஒரு தொழிற்சாலையில் ரசாயனம் செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு ரசாயனம் வெளியேற துவங்கியது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. ரசாயன புகை அருகிலுள்ள குடிகாடு கிராமத்துக்கும் பரவியது. இதனால் அங்கிருந்த மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்டோர் மயங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை நடந்து வருகிறது.

செப் 05, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
செப் 06, 2025 06:55

ஊருக்கு வெளியேதான் தொழிற்சாலைகள் திறக்கப்படுகின்றன. தற்பொழுது வீடுகள் எல்லாம் தொழிற்சாலைகள் இருக்கும் இடத்தில கட்டிவிட்டு தொழிற்சாலைகளை குற்றம் சொன்னால் எப்படி சாமி.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி