சிறுமுகை வனப்பகுதியில் மருத்துவ குழுவுடன் யானைக்கு சிகிச்சை | Sirumugai | Elephant | Forest
மேட்டுப்பாளையம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை காப்புக்காடு பகுதியில் ஆண் காட்டு யானையின் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தெரியவந்தது. உடல் மெலிந்த நிலையில் காணப்பட்ட அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்தனர். மிகவும் சோர்வுடன் காணப்பட்ட யானையின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உடல் கோளாறு ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்தனர். மருத்துவ குழுவினருடன் யானையை நெருங்கிய வனத்துறை முதல் கட்டமாக தர்பூசணி மற்றும் வாழைப்பழம் மூலமாக ஆன்ட்டிபயாடிக் , வலி நிவாரணி கொடுத்தனர். குடற்புழு மாத்திரைகள் மற்றும் கல்லீரல் புத்துணர்வு டானிக் கொடுத்து யானையை கண்காணித்து வருகின்றனர். யானை உடல் நலம் தேறி பழைய நிலைக்கு திரும்பும் என மருத்துவக்குழு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.