உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லட்டு தயாரிக்கும் இடத்தில் SIT அதிகாரிகள் ஆய்வு SIT investigation Tirupati Laddu issue tirumala te

லட்டு தயாரிக்கும் இடத்தில் SIT அதிகாரிகள் ஆய்வு SIT investigation Tirupati Laddu issue tirumala te

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையானது. பக்தர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்த இந்த விவகாரம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமித்தார். ஐ.ஜி. சர்வஸ்ரேஸ்தா திரிபாதி தலைமையிலான 9 பேர் கொண்ட புலனாய்வு குழு திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயார் விருந்தினர் இல்லத்துக்கு நேற்று வந்தனர். லட்டு சர்ச்சை தொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய திருப்பதி போலீசாரை வரவழைத்து விவரங்களை கேட்டறிந்தனர். வழக்கு சம்பந்தமான ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். இன்று 2-வது நாளாக விசாரணை தீவிரமாக நடந்தது.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ