செருப்பு அணிந்து பூஜையில் பங்கேற்றதிமுக எம்பி | Sivalingam MP | salem
சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகர் நகராட்சி பூங்காவில் கட்டுமான பணிக்காக பூமி பூஜை நடந்தது. விழாவில் திமுக எம்பி சிவலிங்கம் பங்கேற்றார். நவதானியங்கள், பால் உள்ளிட்டவை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பூஜைக்கு வந்த அனைவரும் காலணிகளை கழட்டி விட்டு பங்கேற்றனர். ஆனால் எம்பி சிவலிங்கம் செருப்புடன் பூஜையில் கலந்து கொண்டார். அதனுடனே அஸ்திவார செடிக்கு பால் ஊற்றினார். கடப்பாரை பிடித்து பணிகளை துவங்கி வைத்தார்.
ஜூலை 15, 2025