/ தினமலர் டிவி
/ பொது
/ உடல் நல குறைவால் சோனியா மீண்டும் அட்மிட் | Sonia admitted hospital | Delhi | Congress Leader
உடல் நல குறைவால் சோனியா மீண்டும் அட்மிட் | Sonia admitted hospital | Delhi | Congress Leader
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, வயது 78. ஞாயிறு இரவு டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக அவர் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது நிலைமை சீராக உள்ளது. டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், உயர் ரத்த அழுத்தம் காரணமாக இமாச்சல பிரதேசம் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். பின் டில்லி வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.
ஜூன் 15, 2025