வீடு முழுக்க தேடிய போலீஸ் திரையை விலக்கியதும் 'அவுட்' SP leader Kaish Khan Arrest| Samajwadi party|
உத்தர பிரதேசம் கன்னோஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் கைஷ்கான். சமாஜ்வாதி மூத்த தலைவர். முன்னாள் எம்பியும் கூட. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர். கைஷ்கான் மீது, நில அபகரிப்பு உள்ளிட்ட 5 கிரிமினல் வழக்குகள் உள்ளன. கடந்த ஜூலை 28ல் வழக்குகளை விசாரித்த கோர்ட், 6 மாதங்களுக்கு கன்னோஜ் மாவட்டத்திற்குள் நுழைய கைஷ்கானுக்கு தடை விதித்தது. மாவட்டத்தை விட்டு வெளியேறிய கைஷ்கான், சில நாட்களுக்கு பின், யாருக்கும் தெரியாமல், நைசாக வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறார். இது பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அவரது வீட்டுக்கு சென்று தேடினர். போலீஸ் வருவதை முன்பே அறிந்து கொண்ட கைஷ்கான், வீட்டு பரண் மீது ஏறி ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடியிருக்கிறார். வீடு முழுக்க தேடிய போலீசார், சந்தேகப்பட்டு, பரண் திரையை விலக்கி பார்த்தபோது, அங்கே கைஷ்கான் படுக்கையை மூடிக்கொண்டு ஒளிந்து படுத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை கடுமையாக எச்சரித்த கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது. அத்துடன் அடுத்த 6 மாதங்களுக்கு கன்னோஜ் மாவட்டத்தை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டது. #DramaticArrest #SPLeader #KaishKhan #MatressHiding #PoliceDrama #ViralVideo #CaughtRedhanded #CrimeScene