விண்வெளியில் ரோபோடிக் கைகள் பற்றிய காட்சிகளை வெளியிட்ட இஸ்ரோ India's first space robotic arm| is in
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, டிசம்பர் 30ல் PSLV C60 ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பியது. அதில் டாக்கிங் செயற்கை கோள்களுக்கு அடுத்தபடியாக 24 துணை செயற்கை கோள்களும் அனுப்பப்பட்டு, அவை 355 கிலோமீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. அதில் ஒன்றுதான் RRM-TD எனப்படும் ரோபோட்டிக் கைகள். இந்தியாவின் முதல் ரோபோட்டிக் விண்வெளி திட்டமாக இது செயல்படுத்தப்பட்டது. ஒரு ரோபோ பூமியில் செயல்படுவதைப் போல விண்வெளியில் செயல்பட முடியாது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை உணர்ந்து அதற்கேற்ப இஸ்ரோ இந்த ரோபோடிக் கைகளை உருவாக்கியது. ஈர்ப்பு விசையும், இயக்க விசையும் இல்லாத விண்வெளியில் அதற்கேற்ற வகையில் வடிவமைத்து அனுப்பிய ரோபோடிக் கைகள், தனது செயல்பாட்டை சிறப்பாக தொடங்கி இருப்பதாக இஸ்ரோ வீடியோ வெளியிட்டுள்ளது.