உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறப்பு பள்ளி வாகனம் | Special vehicle for tribal School

தமிழக பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறப்பு பள்ளி வாகனம் | Special vehicle for tribal School

நீலகிரி மாவட்டம் வனப்பகுதியில் இருளர், குறும்பர், தோடர் என ஆறு விதமான பழங்குடியினர் 22 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தமிழக பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிட பள்ளிகள் அமைக்கப்பட்டு பழங்குடியினர் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி வரப்படுகிறது. பழங்குடியினர் கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்லும் சாலை அடர்ந்த வனப் பகுதிக்குள் இருப்பதால் வனவிலங்குகள் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதற்கு தீர்வாக பழங்குடியினர் நலத்துறை சார்பில் நீலகிரி மாவட்டத்திற்கு வனவிலங்கு அச்சுறுத்தில் உள்ள பகுதிகளில் பள்ளி குழந்தைகளை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்ல மூன்று சிறப்பு பள்ளி வாகனங்கள் வழங்கி உள்ளனர். பழங்குடியினர் கிராமங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்க ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதை நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ துவக்கி வைத்தார். மாவட்ட ஆதிவாசிகள் நலச்சங்கம் தலைவர் ஆல்வாஸ் வரவேற்றார்.

அக் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ