அன்று கை கொடுத்து உதவியது இந்தியா தான்! இலங்கை எம்பி பாராட்டு | Sri Lankan MP Supports | US Tariff
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார். இந்தியா இந்த மிரட்டலுக்கு பணிய மறுத்ததால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். இந்த நெருக்கடி சூழலில் இந்தியாவுக்கு ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள், தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆதரவு அளித்து உள்ளனர். இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை பார்லியில் அந்நாட்டு எம்பி ஒருவர் சீறி உள்ளார். சமீபத்திய இலங்கை பார்லி விவாதத்தின் போது இலங்கை எம்பி ஹர்சா டி சில்வா பேசியதாவது; அமெரிக்க வரி விதிப்பை பற்றி இங்கு பேச வேண்டிய அவசியமில்லை. இந்தியாவை பார்த்து சிரிக்காதீர்கள். அவர்கள் இந்த நிலையில் இருக்கும்போது அவர்களை கேலி செய்யாதீர்கள். நம் நாடு பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த போது அவர்கள் மட்டுமே நமக்கு கை கொடுத்து தூக்கி விட்டனர். உங்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ஆட்டம் இன்னும் முடியவில்லை. இந்தியாவின் இந்த தைரியமான எதிர் கொள்ளும் நடவடிக்கை ஆசியாவையே ஊக்கப்படுத்தி உள்ளது. வரிகள் 15 சதவீதமாக குறையும் என இந்தியா எதிர்பார்த்தது. நாமும் அதையே எதிர்பார்ப்போம். இந்தியாவை பார்த்து யாரும் சிரிக்க வேண்டாம். நாளை நமக்கும் அமெரிக்கா 15 முதல் 20 சதவீத வரி விதிக்கும் வாய்ப்பு உள்ளது என ஆவேசமாக பேசினார். இது தொடர்பான வீடியோவை ஷேர் செய்துள்ள அவர், இந்தியாவின் துணிச்சலான நிலைப்பாட்டை கேலி செய்ததற்காக இலங்கை பார்லியில் அரசை கண்டித்தேன் என கூறி உள்ளார்.