/ தினமலர் டிவி
/ பொது
/ கச்சத்தீவு எங்கள் பூமி: இலங்கை அதிபர் திட்டவட்டம் Srilankan President Kachatheevi Visit| Srilanka P
கச்சத்தீவு எங்கள் பூமி: இலங்கை அதிபர் திட்டவட்டம் Srilankan President Kachatheevi Visit| Srilanka P
இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையே, ராமேஸ்வரம் தீவை ஒட்டி அமைந்துள்ள சிறிய தீவுப்பகுதி தான் கச்சத்தீவு. நிலப்பரப்பில் சிறியதாக இருப்பினும், அதன் அமைவிடம் சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு, இந்த தீவு மிகவும் முக்கிய பகுதியாக உள்ளது. நம் நாட்டிற்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவை 1974ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா, இலங்கை வசம் ஒப்படைத்தார். அது தொடர்பாக இருநாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பின், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி, அந்நாட்டு கடற்படை அடிக்கடி கைது செய்வது இன்றும் தொடர்கதையாக உள்ளது
செப் 02, 2025