அமெரிக்க உறவை மேம்படுத்த இந்தியா உறுதி: மோடி Star Link |PM Modi| Elon Musk|Phone talk
உலகின் மிக முக்கிய தொழில் அதிபராகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நெருக்கமானவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா பேட்டரி கார் கம்பெனி முதல் எக்ஸ் சமூக வலைதளம் வரை பல தொழில்களை நடத்தி வரும் மஸ்க், சேட்டிலைட் மூலம் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் ஸ்டார் லிங்க் நிறுவனமும் நடத்துகிறார். ஸ்டார் லிங்க் நிறுவனத்தை இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளுக்கு கொண்டு செல்ல எலான் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவருடன் எலான் மஸ்க் இது குறித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் உயர்மட்ட குழுவிடம் டில்லியில் இந்த வாரம் பேச்சு நடத்தினார். அதில், ஸ்டார் லிங்க்கை இந்தியாவில் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.