உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமலாக்க அதிகாரிகள் வாகனம் முற்றுகை; கல் வீச்சால் பரபரப்பு stone thrown at ED vehicle| bhupesh baghel

அமலாக்க அதிகாரிகள் வாகனம் முற்றுகை; கல் வீச்சால் பரபரப்பு stone thrown at ED vehicle| bhupesh baghel

சத்தீஸ்கரில் 2019-22 வரை, முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது மதுக்கொள்கையில் ஊழல் நடந்ததாகவும், இதனால், அரசுக்கு 2100 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இது பற்றி அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜனவரியில் முன்னாள் அமைச்சர் உட்பட முக்கிய நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். 205 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இச்சூழலில், துர்க் மாவட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா, அவருக்கு நெருக்கமான லட்சுமி நாராயணன் ஆகியோர் வீடுகள் உட்பட 14 இடங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். முன்னாள் முதல்வர் பூபேஷும் அவரது மகன் சைதன்யாவும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். மதுக்கொள்ளை ஊழல் பணத்தில் ஒரு பங்கு சைதன்யா பெற்றதாக கூறப்படுகிறது. இதனால், பூபேஷ் வீட்டில் சோதனை நடந்தது. சோதனை முடிவில் கணக்கில் வராத 33 லட்சம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். பூபேஷ் பகேல் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கிளம்பியபோது, அவர்களை காங்கிரஸ் கட்சியினர் மறித்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிகாரிகள் வந்தகார் மீது கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை