உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு அதிகாரிகள் மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி | Stray dog case | Seeking stay order |Supreme court

அரசு அதிகாரிகள் மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி | Stray dog case | Seeking stay order |Supreme court

தெரு நாய்களால் அதிகரித்து வரும் பாதிப்புகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து கடந்த வாரம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. 2 நாட்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா, மஹாதேவன் அமர்வு, நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டனர். அப்போது பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கினார். இந்த உத்தரவுக்கு ஆதரவு இருந்தாலும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் விசாரணை நடத்த 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் அமைத்தார். அதன்படி நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. அப்போது டில்லி அரசு சார்பில் இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். நாய் கடிக்கு பிறகு ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு பல்வேறு குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது. கருத்தடை சிகிச்சை செய்தாலும் ரேபிஸ் தொற்று பரவலை தடுக்க முடியாது. நாய்களுக்கு தடுப்பூசி போட்டாலும் அது குழந்தைகளை கடிப்பதை தடுக்க முடியாது. விலங்குகளை யாரும் வெறுப்பதில்லை. 100 விஷ இனங்களில் நான்கு விஷ இனங்கள் உள்ளன. நாங்கள் அவற்றை வீட்டில் வைத்திருப்பதில்லை. நாய்களை கொல்ல வேண்டியதில்லை; அவற்றைப் பிரிக்க வேண்டும் 2024ல் 37 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார். விலங்கு நல அமைப்பான ப்ராஜெக்ட் கைண்ட்னஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், டில்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் வேறு இடத்திற்கு மாற்றும் உத்தரவை அமல்படுத்த முடியாது என்று வாதிட்டார். தெருநாய்களை விடுவிக்கக் கூடாது என்று உத்தரவு சொல்கிறது. ஆனால் காப்பகங்கள் இல்லாததால் இதுவும் பொருந்தாது. எனவே தெருநாய்களை அழைத்து செல்லும் உத்தரவையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பார்லிமென்ட் விதிகளையும் சட்டங்களையும் உருவாக்குகிறது. ஆனால் அவை செயல்படுத்தப்படவில்லை. விலங்கு கட்டுப்பாட்டுக்கான வழிகாட்டுதல்களை சரியாக அமல்படுத்ததே இந்த நிலைமைக்கு காரணம் அரசு அதிகாரிகளை கடுமையாக கண்டித்தனர். ஒருபுறம், மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். மறுபுறம், விலங்கு பிரியர்கள் இங்கே இருக்கிறார்கள். தெருநாய்களுக்கு ஆதரவாக மேம்போக்கான விவாதங்களை முன்வைக்காதீர்கள் என விலங்கு ஆர்வலர்களை அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி