உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தப்பி ஓடிய கூட்டாளி பேராசிரியரை தேடும் போலீஸ் | St.Xavier's College | Tirunelveli | Dinamalar

தப்பி ஓடிய கூட்டாளி பேராசிரியரை தேடும் போலீஸ் | St.Xavier's College | Tirunelveli | Dinamalar

நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் நூற்றாண்டு பழமை வாய்ந்த புதிய தூய சவேரியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு திருச்செந்தூரை சேர்ந்த 40 வயதான ஜெபஸ்டினும், தூத்துக்குடியை சேர்ந்த பால்ராஜும் சமூகவியல் துறை பேராசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர். இருவரும் கடந்த 4-ந்தேதி இரவு, நெல்லை மாநகர பகுதியில் ஒரு விடுதியில் மது குடித்தனர். போதை தலைக்கு ஏறவே, துறை சார்ந்த முதுகலை மாணவிக்கு போன் செய்த பால்ராஜ், மாணவியிடம் ஆபாசமாக பேசி உள்ளார். மாணவி அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஜெபஸ்டினும் செல்போனை பிடுங்கி ஆபாசமாக பேசி உள்ளார். நாங்கள் 2 பேரும் மது குடித்துக்கொண்டிருக்கிறோம். நீயும் வா.. மது குடிக்கலாம் என மாணவியை அழைத்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த பெற்றோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அடுத்த நாள் காலையிலேயே புகார் அளித்தனர். ஆனால், தங்களது மகளின் கல்வி பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் விசாரணையை துவங்குவதற்கு முன்பே புகாரை திரும்ப பெற்றுவிட்டனர். மாணவியின் பெற்றோர் கூறியதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்ட போலீசார், அவர்களை அனுப்பி வைத்தனர்.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை