பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொடரும் லஞ்ச வேட்டை | Sub Registrar | Bribery | toilet| Puducherry
புதுச்சேரி அரசு துறைகளில் கடந்த சில ஆண்டுகளாக லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. குறிப்பாக பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலை உள்ளது. போலி பத்திரம், உயில்கள் மூலம் கோயில் நிலங்கள், அரசு இடங்கள், தனியார் சொத்துகளை அபகரிப்பது அதிகரித்து உள்ளது. முறைகேடாக சொத்துகளை அபகரிக்கும் கும்பல்களுக்கு பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதற்காக அவர்களுக்கு பல கோடிகள் லஞ்சமாக கைமாறுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் மணக்குள விநாயகர் கோயில் அருகில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் போலி பத்திரம் மூலம் அபகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த முறைகேட்டில் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த்க்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.