கொண்டாட்டத்தில் சுனிதா வில்லியம்ஸ் குடும்பம் Sunita |returns |spacex |family rejoice |
சர்வதேச விண்வெளி மையத்தில் சுமார் 9 மாதம் தங்கி இருந்த சுனிதா வில்லியம்ஸ் சக விஞ்ஞானிகளுடன் நேற்று அதிகாலை பத்திரமாக பூமிக்கு திரும்பினார். தற்போது அவர் நாசாவின் கட்டுப்பாட்டில் 45 நாள் மறுவாழ்வு சிகிச்சை மற்றும் பயிற்சியில் இருக்கிறார். உலகமே சுனிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறது. சுனிதாவின் குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வசிக்கும் சுனிதாவின் உறவினரான தினேஷ் ராவல் கூறும்போது, சுனிதா மகத்தான செயல் புரிவதற்காக விதிக்கப்பட்டவர். அவர் பூமிக்கு திரும்பிய போது நாங்கள் துள்ளி குதித்தோம். அவர் திரும்பும் வரை ஒரு வகையான அமைதியின்மை எனக்குள் இருந்தது. ஆனால், கடவுள் எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு எங்கள் சுனியை பாதுகாப்பாக மீட்டுத் தந்துள்ளார். சுனிதா சாதாரணமானவர் இல்லை. அவர் இந்த உலகை மாற்றுவார் என தினேஷ் ராவல் தெரிவித்தார்.