உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீட் முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு Supreme Court | Neet UG paper leak case | Verdict |

நீட் முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு Supreme Court | Neet UG paper leak case | Verdict |

NTA குறைகளை சரி செய்யணும் வினாத்தாள் சேப்டி முக்கியம்! நீட் மறு தேர்வு இல்லை Desc: நாடு முழுவதும் மே 5-ல் நீட் தேர்வு நடைபெற்றது. 23 லட்சம் பேர் எழுதினர். இதன் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார் எழுந்தது. ஒரே மையத்தை சேர்ந்த சிலர் முழு மார்க் பெற்றது. கருணை மார்க் வழங்கியது என நீட் முறைகேடு புகார் வலுத்தது. மறு தேர்வு நடத்த உத்தவிடக்கோரி, பல மாநிலங்களில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட் ஒரு சேர விசாரித்தது. வினாத்தாள் கசிவு தொடர்பாக NTA எனப்படும் தேசிய தேர்வு முகமையை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். பார்லிமென்ட்டிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, தேசிய தேர்வு முகமைக்கு புதிய தலைவரையும் நியமித்தது. சிபிஐ விசாரணையில் பீகார் தலைநகர் பாட்னா, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக்கில் வினாத் தாள்கள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மருத்துவ மாணவர்கள், புரோக்கர்கள், பத்திரிகையாளர்கள், ஜாம்ஷெட்பூர் ஐஐடி பட்டதாரி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆதாரங்களை எடுத்துச் சொல்லி நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்த மனு தாரர்கள் கோரிக்கை வைத்தனர். ஒரு சில இடங்களில் நடந்த தவறுகளுக்காக நாடு முழுவதும் நீட் மறு தேர்வு நடத்துவது சரியாக இருக்காது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறினர். நீட் வழக்கின் இன்றைய விசாரணையிலும் மறு தேர்வு நடத்த நடத்த உத்தரவிட முடியாது என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை