உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீட் போராட்டத்தில் போலீஸ் தடியடி: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நீட் போராட்டத்தில் போலீஸ் தடியடி: அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு கண்டனம் தெரிவித்து, டில்லியில் கடந்த 20ம் தேதி, கரப்பான் பூச்சி மக்கள் கட்சி இயக்கத்தினர் மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். ஜந்தர் மந்தரில் இருந்து பார்லிமென்ட் நோக்கி பேரணி செல்ல முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். அப்போது இரு தரப்பிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போரட்டக்காரர்களை கலைந்து செல்ல வைக்க பேசாலீசார் தடியடி நடத்தினர். பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து மாணவர் அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. போலீஸ் தரப்பிலும் காயம் ஏற்பட்டதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இது தொடர்பாக இன்று கோர்ட் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜனநாயக ரீதியிலான மாணவர் போராட்டத்திற்கு எந்த தடையும் இல்லை. நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைதான 18 வயதுக்கு குறைவான சிறார்களில் குற்றப் பின்னணி இல்லாத அனைவரையும் விடுவிக்க வேண்டும். போராட்டம் நடந்த அனைத்து மாநில அரசுகளும் இந்த உத்தரவை பின்றபற்ற வேண்டும். வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள் மீது எவ்வித கடுமையான போலீஸ் நடவடிக்கையும் கூடாது. போராட்டத்தின் போது நடந்த சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள், பிற வீடியோ பதிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மாணவர் போராட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து, விரிவான, ஆழமான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், கேரளா, அசாம், பீகார் உள்ளிட்ட போராட்டம் நடந்த மாநில அரசுகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourtonNeetProtest #NeetProtestCase #NeetCase #SC #ReleaseMinors #StudentsProtest #CJP

ஜூலை 28, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sathyan
ஆக 06, 2026 03:56

இது நீட் தேர்வுக்கான போராட்டமே அல்ல, நீட் சொல்லை பயன்படுத்தி இந்தியவில் குழப்பத்தை ஏற்படுத்தப்பட்ட நடந்த ஒரு பிம்ப போராட்டம், இது உச்ச நீதிமன்றத்துக்கு கண்டிப்பாக தெரியும். அப்படி இருக்க இப்படி அவர்கள் எப்படி சொல்லலாம். இது போன்ற வேண்டுமென்றே கிளப்பப்பட்ட வன்முறை போராட்டங்களில் கலந்து கொண்டவர்களின் ஆதார், பாஸ்போர்ட், ட்ரைவிங் லைஸென்ஸ் , வோட்டர் கார்டு, ரேஷன் கார்ட் ஆகியவவற்றை உடனே தடை செய்யவேண்டும். அவர்கள் படித்து வாங்கிய சான்றிதழ்களை உடனே செல்லாக்காசு ஆகாமல் தடை செய்யவேண்டும். இப்படி செய்யாமல் இவர்களை தடவி கொண்டிருந்தால் மேலும் போராட்டம் எடுக்க முன்வருவார்கள்.


K V Ramadoss
ஆக 01, 2026 03:57

வழ வழ கொழ கொழ தீர்ப்பு..


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை