உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுப்ரீம் கோர்ட்டில் அனல் பறக்க வாதாடிய துஷார் மேத்தா | Tushar Mehta vs Supreme court | CJI BR Gavai

சுப்ரீம் கோர்ட்டில் அனல் பறக்க வாதாடிய துஷார் மேத்தா | Tushar Mehta vs Supreme court | CJI BR Gavai

மாநில சட்டசபைகளில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க, கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீர்ப்பின் மீது 14 கேள்விகளை எழுப்பி ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் எழுதினார். இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சந்துர்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டு வருகிறார்.

ஆக 23, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Training Coordinator
ஆக 31, 2025 05:19

எங்கே அனல் பறக்கிறது?


NAGARAJAN
ஆக 28, 2025 20:32

பாஜக ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் அவர்களின் வேலையை ஒழுங்காக பார்த்தால் பிரச்சினை எங்கே வரப்போகிறது. . இவர்கள் ஏதோ நியாயவான்கள் போல. . ஏன் மத்திய அரசு இவ்வளவு மெனக்கெட வேண்டும். . இதற்கு ஜனாதிபதியும் துனை போவது வேதனையிலும் வேதனை


Chandramohan M.
ஆக 24, 2025 15:20

ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கக்கூடிய ஒவ்வொரு அமைப்பும் நீதித்துறை அரசுத்துறை உள்ளிட்ட அவரவர் எல்லை எது என அறிந்திருப்பவர்கள் தான் ஆனாலும் இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் எப்போதும் எல்லை மீறுபவர்கள் தான். மற்றவர்கள் அளவோடு மீறுவர். இது தான் நடைமுறை


Sathiesh
ஆக 24, 2025 12:17

நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தீர்ப்பு வழங்காவிட்டால், அப்படி தீர்ப்பு வழங்காத நீதிபதிகளை முதல் முறையாக இருந்தால் எச்சரிக்கை, இரண்டாவது முறையாக இருந்தால் பணியிடை நீக்கம், மூன்றாவது முறையாக இருந்தால் பதவி குறைப்பு என்று மத்திய அரசு ஆணையிட வேண்டும். அப்புறம் பாருங்கள், நீதிபதிகள்/நீதிமன்றம் எப்படி செயல்படுகிறது னு.


Thiunniyam Dewakar
ஆக 24, 2025 10:37

கவர்னர் ஜனாதிபதி சட்டமைப்பு அதிகாரிகள். அவர்கள் வேலையில் சுப்ரீம்கோர்ட் தலையிடக்கூடாது.


BALAKRISHNAN SUNDARAVARADHAN
ஆக 24, 2025 08:43

இயற்கை பிரபஞ்சம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அதர்மவாதிகளுக்கு விரைவில் ஓ பிரபஞ்சம் அன்னையேஇயற்கை தாயே


BALAKRISHNAN SUNDARAVARADHAN
ஆக 24, 2025 08:39

உருவாக்க படும் சட்டங்கள் அதர்வாதிகளுக்கு சாதகமாக அமைகின்றன. அப்பாவிகள் நல் உறவுகள் சிதைக்க படுகின்றன வேதனை அதர்மங்கள் தலைவிரித்தாடுகின்றன நீதி அப்பாவி மக்களுக்கு கிடைக்க விலைமதிப்பற்ற உயிரை குடித்து விடுகின்றன இந்த அதர்ம மனித சமூகம்


VASANTHA KANNAPIRAN
ஆக 23, 2025 21:00

சட்ட ஒப்புதல் வரையறைகள் ஏற்கெனவே மத்திய அரசு வெளியிட்ட நிர்வாக ஆணையின் அடிப்படையையே நீதிமன்றம் உறுதி செய்கிறது. இதில் தவறு எப்படி காணமுடியும்.


Rajamani
ஆக 23, 2025 17:33

ஒரு நீதியரசர் அரசு சாசனங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்கவேண்டும். நீதிபதியாக கொள்கைக்குமாறாக நடந்தால்அவருக்கு இடம்மாற்றம்.பொதுமக்களுக்கு தண்டனை! என்ன நியாயம். நம் நாடு மன்னர் ஆட்சி இல்லை.நம் நாட்டின் குடிமகன்கள் எல்லாரும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவேண்டும்.


Sadananthan Ck
ஆக 23, 2025 16:46

அரசியல் சாசனத்தில் இல்லாத சட்டத்தை உச்ச நீதிமன்றத்தால் இயற்ற முடியுமா சட்டம் இயற்ற வேண்டிய இடம் பாராளுமன்றம் தானே உச்சநீதிமன்றத்திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ