உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக அரசு விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு | TNGovt | Supreme Court | Idol smuggling case |

தமிழக அரசு விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு | TNGovt | Supreme Court | Idol smuggling case |

தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக 41க்கும் அதிகமான கோப்புகள் மாயமாகி உள்ளது. சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வக்கீல் யானை ராஜேந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிலை கடத்தல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் மாயமானதாக அரசு தரப்பில் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் அவை திருடப்பட்டுள்ளன. 38 போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து 41 ஆவணங்கள் திருடப்பட்டு இருப்பது சாதாரண விஷயம் அல்ல. இதில் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களின் பொறுப்பு அதிகாரிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவாகவில்லை. வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சிலைகள் குறித்த விபரங்களும் கிடைக்க பெறாமலேயே உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் தொடர்பான விஷயங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என மனுதாரர் ராஜேந்திரன் வாதிட்டார். சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் எப்படி தொலைந்தன? 375க்கும் அதிகமான சிலைகள் திருடப்பட்டு இருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன.

செப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !