மீண்டும் ஓட்டுச்சீட்டா? சுப்ரீம் கோர்ட் உத்தரவு இதான்
தேர்தல்களை பழையபடி ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. மின்னணு ஓட்டுப்பதிவு முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், பழையபடி ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பணம், மதுபானம், பரிசு பொருட்கள் கொடுத்து, ஓட்டு கேட்கும் வேட்பாளர்களை ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாதபடி, தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி, கே.ஏ.பால் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
நவ 27, 2024