உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அர்ச்சகர் மரணத்தை நினைவுகூரும் சக அர்ச்சகர் Suralmala Wayanad | Sivan Temple | Banian Tree | Priest

அர்ச்சகர் மரணத்தை நினைவுகூரும் சக அர்ச்சகர் Suralmala Wayanad | Sivan Temple | Banian Tree | Priest

வயநாடு, சூரல்மலை நிலச்சரிவின் சோக செய்திகள் ஒவ்வொன்றாக வந்துகொண்டு இருக்கி்னறன.. மனிதர்களுடன், அவர்களின் உடமைகளும் புதையுண்டு கிடக்கின்றன. சூரல்மலை ஆற்றை ஒட்டி ஒரு அம்மன் கோயில் இருந்தது. கடந்த ஆண்டு அது சிவன் கோயிலாக மாற்றப்பட்டது. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அந்த சிவன் கோயில் இப்போது இல்லை. மண்ணில் புதைந்து போனது. கோயிலுக்கு அருகில் இருந்த ஆலமரம் மட்டும் இயற்கை பேரிடருக்கு சாட்சியாக நிற்கிறது. சிவன் கோயில் அர்ச்சகர் கல்யாணகுமாரும் நிலச்சரிவில் பலியான நிலையில் அவருடன் பணியாற்றிய அர்ச்சகர் நாகராஜ், கல்யாணகுமாரின் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி