முறைகேடு செய்த நிதியை திருப்பி செலுத்த உத்தரவு
தேனி மாவட்டம், சுருளிப்பட்டி ஊராட்சி தலைவராக இருந்தவர் நாகமணி. திமுகவை சேர்ந்தவர். இவருக்கும் ஊராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு இருந்து வந்தது. தலைவர் நாகமணி, ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்துவதாக உறுப்பினர்கள் அடிக்கடி புகார்கள் கூறி வந்தனர். அவரை பதவி நீக்கவும் கோரினர். தேனி கலெக்டர் ஷஜீவனாவுக்கு புகார் சென்றது. ஊராட்சி நிதியில் நாகமணி முறைகேடு செய்தது விசாரணையில் அம்பலம் ஆனது.
அக் 21, 2024