போர் விமானத்துடன் மோத இருந்த பயணிகள் விமானம் | SW 1496 | Flight | USA | Viral Video
அமெரிக்காவில் கலிபோர்னியாவின் பர்பாங் ஏர்போர்ட்டில் இருந்து லாஸ் வேகாஸ்க்கு நேற்று சவுத் வெஸ்ட் விமானம் புறப்பட்டது. டேக் ஆப் ஆன சுமார் 10வது நிமிடத்தில் இந்த விமானத்தில் வழியில் அமெரிக்க ராணுவ விமானம் குறுக்கிட்டுள்ளது. இரண்டு விமானங்களும் நடு வானில் மோதிக்கொள்ளும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் பயணிகள் விமானத்திற்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்த எச்சரிக்கை வந்தது. அதன்படி, மோதலை தவிர்ப்பதற்காக, பைலட்கள் விமானத்தின் உயரத்தை சட்டென உயர்த்தி சுமார் 500 அடிக்கு கீழ்நோக்கி டைவ் அடித்தனர். பைலட்களின் சாதூரியத்தால், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அதன் பின் விமானம் பத்திரமாக லாஸ் வேகாஸில் தரை இறங்கியது. நடுவானில் டைவ் அடித்தபோது, விமானம் திடீரென குலுங்கியதால் பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். விமான பணிப்பெண்கள் இருவர் காயமடைந்தனர். நடுவானில் நடந்த இந்த பகீர் அனுபவத்தை பயணிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அமெரிக்காவின் நகைச்சுவை நடிகர் ஜிம்மி டோர் கூறும்போது, நடுவானில் மோதலை தவிர்க்க பைலட் ஆக்ரோஷமான டைவ் செய்ய வேண்டி இருந்தது. நாங்கள் இருக்கையில் இருந்து பறந்து கூரையில் மோதிக்கொண்டோம். விமான பணிப்பெண்ணுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது என கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.