உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகளிர் டி-20 உலககோப்பையில் முதல் வெற்றி பெற்ற இந்தியா! PAK Women vs IND Women

மகளிர் டி-20 உலககோப்பையில் முதல் வெற்றி பெற்ற இந்தியா! PAK Women vs IND Women

மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த ஏ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. நிதானமாக ஆடிய அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்தது. இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஷபாலி வர்மா 32, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 29 ரன் எடுத்தனர். இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா. இந்தியாவின் அருந்ததி ஆட்ட நாயகி விருது வென்றார்.

அக் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ