உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்துக்கு வானிலை மையம் கொடுத்த அலர்ட்! | Meteorological | IMD | Chennai Weather

தமிழகத்துக்கு வானிலை மையம் கொடுத்த அலர்ட்! | Meteorological | IMD | Chennai Weather

சென்னை வானிலை மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 12ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஏப்ரல் 18 வரை லேசானது முதல் மிதமான மழையும் பெய்யகூடும். அதே போல் இன்று முதல் 14ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2- 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கலாம்.

ஏப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை