கோவையில் SIDA Defence Expo 2026: காட்சிக்கு வந்த அற்புத கண்டுபிடிப்புகள் | TANFAMA | SIDA
SIDA Defence Expo 2026 என்கிற பெயரில் பட்டாசு உற்பத்திக்கான தொழில்நுட்பம் குறித்த தேசிய அளவிலான கண்காட்சி கோவையில் தொடங்கியது. TANFAMA(டான்பாமா) எனப்படும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் அமோர்சஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய பாதுகாப்பு உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம்(SIDA) இணைந்து நடத்துகின்றன. பட்டாசு உற்பத்தியில் விபத்துகளை முற்றிலுமாக தடுத்து, தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கண்டுபிடிப்புகள் காட்சிபடுத்தப்பட்டன. இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் சுமார் 90 சதவீத பங்களிப்பை தமிழகம் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு 6,000 கோடி வர்த்தகத்தை கொண்டுள்ள இந்த துறை மூலம் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பட்டாசு உற்பத்தி துறையின் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல தொழில்நுட்பம், ஆராய்ச்சியை இணைப்பது மிக அவசியம். இதற்கு பாலமாக இந்த கண்காட்சி அமையும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதில் பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பை தாண்டி ராணுவத்துக்கான கண்டுபிடிப்புகளும் இடம்பெற்று இருந்தன. ரத்த போக்கை நொடியில் கட்டுப்படுத்தும் பஞ்சு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.