உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாஸ்மாக் ஊழியர்கள் கூண்டோடு சஸ்பெண்ட் | Tasmac | Kancheepuram | 10Rs

டாஸ்மாக் ஊழியர்கள் கூண்டோடு சஸ்பெண்ட் | Tasmac | Kancheepuram | 10Rs

பில்லிங் சிஸ்டம் வந்தும் கமிஷன் அடிப்பது நிற்கல! கூண்டோடு சஸ்பெண்ட் தமிழகத்தில் உள்ள 4829 டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம், நாளென்றுக்கு சுமார் 120 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. மது விற்கும்போது பாட்டிலுக்கு 10 முதல் 40 ரூபாய் வரை கூடுதலாக பணம் வசூலிப்பது தொடர்கதையாக இருக்கிறது. இது பற்றி தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இதற்கு தீர்வு காண, டிஜிட்டல் முறையில் பில் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. முதற்கட்டமாக சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள 220 டாஸ்மாக் மதுக்கடைகளில் பில் வழங்கும் முறை தொடங்கப்பட்டு உள்ளது. மது பாட்டிலில் விலை விவரம் அடங்கிய க்யூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை ஸ்கேன் செய்து பில் வழங்க கையடக்க கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், பாட்டிலுக்கு எக்ஸ்ட்ரா காசு வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும் என மதுப்பிரியர்கள் நிம்மதி அடைந்தனர். பில் சிஸ்டம் மூலம், நண்பகல் 12 முதல் இரவு 10 மணிவரை மட்டுமே மதுவகை விற்க முடியும் என்பதால், கள்ளச்சந்தையில் மது விற்பதும் தடுக்கப்படும் தடுக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. ஆனால் பில்லிங் சிஸ்டம் வந்த பிறகும், பில் தொகைக்கு மேல் கூடுதலாக மதுக்கடை ஊழியர்கள் வழக்கம்போல் அதிக பணம் வசூலிப்பாக புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக வீடியோ வைரல் ஆனது.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை