உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாஸ்மாக் வழக்கு ED விசாரணைக்கு இடைக்கால தடை தொடர்கிறது | TASMAC Case | ED investigation

டாஸ்மாக் வழக்கு ED விசாரணைக்கு இடைக்கால தடை தொடர்கிறது | TASMAC Case | ED investigation

டாஸ்மாக்கில் 1,000 கோடி ஊழல் நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் சென்னை, விழுப்புரம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் திரைத் துறையைச் சேர்த்தவர்களின் வீடு, அலுவலகங்களிலும் ரெய்டு தொடர்ந்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு செய்தது. விசாரித்த கோர்ட் , அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி அறிவுறுத்தியது. தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை சோதனை மற்றும் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. நேற்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறைக்கு எதிராக தேவையில்லாத கருத்துகளை கோர்ட் கூறுவதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கூறுகிறார் நாங்கள் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை தான் விமர்சிக்கிறோம். எந்த ஒரு தனி நபரையோ அல்லது அமைப்பையோ, தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. வழக்கத்திற்கு மாறான விஷயங்களை செய்யும் போது, அதை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். யாரையும் குறிப்பிட்டு விமர்சனங்களையும், கருத்துகளையும் கூற வேண்டும் என்பது எங்களின் எண்ணம் அல்ல என நீதிபதிகள் கூறினர். தொடர்ந்து டாஸ்மாக் விவகாரத்தில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என அமலாக்கத் துறை வக்கீல் கேட்டார். அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை நான்கு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை அமலாக்கத் துறை சோதனை மற்றும் விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் கூறினர்.

ஆக 19, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Narayanan
ஆக 26, 2025 14:47

உச்சநீதிமன்றம் மாநில நீதிமன்றங்களின் உத்திரவை சார்ந்து நின்றால் மட்டுமே குற்றங்கள் குறையும். அதை விடுத்து உச்சநீதிமன்றம் போன வழக்குகள் அனைத்தையும் தடை செய்துகொண்டே இருந்தால் குற்றங்களை கண்டுபிடிக்கும் அதிகாரிக்கும் சலிப்பு தட்டிவிடும். குற்ற்றங்களும் குறையாது. முதலில் யார் லஞ்சம் வாங்கினாலும் தவறு என்ற மனோபாவம் வந்தால் மட்டுமே நாட்டிற்கு நல்லது. அந்த மனோபாவம் பள்ளி குழந்தைகளிடம் ஆரம்பிக்கவேண்டும் நீதிக்கதைகள் மூலம். பின்னர் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு அவசியம். தேர்வுதான் நல்லவர்களை கொண்ட சமுதாயம் உருவாக்கும் .


Rajasekar Jayaraman
ஆக 19, 2025 12:16

திமுகவை சுப்ரீம் கோர்ட் தண்டிக்காது.


ஆரூர் ரங்
ஆக 19, 2025 10:39

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தான் ஒரு படி மேல் என யார் ஆதிக்கம் செய்ய முயன்றாலும் அது ஜனநாயக அழிவின் துவக்கம். டாஸ்மாக்கில் ஊழலே இல்லை என்றால் யாரும் நம்பமாட்டார்கள்.


சுந்தர்
ஆக 19, 2025 09:44

சுப்ரீம் Waste


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி