டாஸ்மாக் கடையை அகற்ற ஊர் பெண்கள் எதிர்ப்பு | TASMAC | Tiruppur
திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் 35 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாதுகாப்பு தான் உள்ளது. தேவையில்லாமல் சில கட்சிகளை சேர்ந்தவர்கள் அதை அகற்ற முயல்கின்றனர். தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என கோரி அப்பகுதி பெண்கள் 30க்கும் அதிகமானோர் திருப்பூர் கலெக்டர் ஆபிசில் புகார் கொடுத்து தர்ணா செய்தனர். வழக்கமாக பெண்கள் டாஸ்மாக் கடையை அகற்ற போராடி பார்த்த அதிகாரிகளுக்கு இது வித்தியாசமாக இருந்தது. நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.
ஜூன் 23, 2025