சரக்கு வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மது பிரியர்கள் டென்ஷன்|Tasmac|Delay in open| Karaikudi
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆத்தங்குடியில் ஒரே ஒரு டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இன்று மாசி திருவிழாவை முன்னிட்டு அரசு அனுமதியுடன் மஞ்சுவிரட்டு போட்டி நடந்ததால் டாஸ்மாக் கடையை வழக்கத்துக்கு மாறாக ஒரு மணிக்கு மேல் திறக்க போலீஸ் அறிவுறுத்தியாக கூறப்படுகிறது. மஞ்சுவிரட்டை பார்க்க வந்தவர்களில் மதுபிரியர்கள் போட்டி முடிந்ததும் டாஸ்மாக் கடையை நோக்கி படையெடுத்தனர். 12 மணிக்கு கடை திறந்துவிடும் என எதிர்பார்த்து வந்த மதுபிரியர்கள் வரிசையில் நிற்க தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்த நிலையில், கடை திறக்காததால் வரிசை நீண்டுகொண்டே போனது. காத்திருந்து பொறுமை இழந்த மதுபிரியர்கள் கடையின் ஷட்டரை தட்டி சத்தமிட்டு கடையை திறக்க வலியுறுத்தினர்.