உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாடா குழுமத்தின் எதிர்கால தலைவர்கள் | Rathan tata | Tata group | Noel Tata | Maya Tata

டாடா குழுமத்தின் எதிர்கால தலைவர்கள் | Rathan tata | Tata group | Noel Tata | Maya Tata

₹3800 கோடி டாடா சாம்ராஜ்யம் அடுத்து வழிநடத்த போவது யார்? டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார். டாடா குழுமம் இந்திய மக்களின் கல்வி முதல் சுகாதாரம் வரையும், நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு ஆற்றி வருவதால் இந்திய மக்களிடையே ரத்தனின் மறைவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டாடா சன்ஸ் நிர்வாகத்தின் தலைவராக என் சந்திரசேகரன் 2017 ல் இருந்து பணியாற்றி வருகிறார். டாடா குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் குழுமத்தின் பல்வேறு பிரிவுகளில் பொறுப்பு வகிக்கின்றனர். ரத்தன் டாடா மறைவுக்கு பிறகு 3800 கோடி ரூபாய் மதிப்புள்ள டாடா சாம்ராஜ்யத்தை அவரது குடும்பத்தில் இருந்து யார் வழிநடத்த போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், டாடா குடும்பத்தின் அடுத்த தலைமுறை மீது அனைவரின் கவனம் திரும்பி உள்ளது. ரத்தன் டாடாவின் சகோதாரர் நோயல் டாடாவின் குழந்தைகளான லியா, மாயா, நெவில் டாடா குழுமத்தின் அடுத்த வாரிசுகள் பார்க்கப்படுகின்றனர். டாடா குழுமத்தில் பெரும் அதிகாரம் செலுத்தும் டாடா டிரஸ்ட்டின் நிர்வாகம் நோயல் டாடாவுக்கு வரும். வாரிசுகளில் மூத்தவரான லியா டாடா, ஸ்பெயின் நாட்டில் மார்க்கெட்டிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர். 2006ல் தாஜ் ஓட்டல் உதவி விற்பனை மேலாளராக நியமிக்கப்பட்டார். இளைய மகள் மாயா, டாடா கேபிடலில் தமது தொழிலை தொடங்கினார். டாடா குழுமத்தின் முன்னணி நிதி சேவை நிறுவனத்தில் அனலிஸ்ட் ஆக உள்ளார்.

அக் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ