உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர் மகேஷுக்கு எதிராக நிர்வாகி கொந்தளிப்பு | Teachers Association | TVK Vijay | DMK

அமைச்சர் மகேஷுக்கு எதிராக நிர்வாகி கொந்தளிப்பு | Teachers Association | TVK Vijay | DMK

விஜயை சந்தித்ததால் ஆசிரியர் சங்கத்தை உடைக்கும் முயற்சிகள் நடக்கிறது என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் மாயவன் கூறினார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தது ஏழு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து வலியுறுத்தினோம்.ஆனால், நிதி நிலையைக் காரணம் காட்டி, அரசு தரப்பில் எதையும் செய்து கொடுக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் எதுவும் நடக்கவில்லை. எங்கள் போராட்டங்களுக்கு வலுசேர்க்க த.வெ.க., தலைவர் நடிகர் விஜயை சந்திக்க முடிவெடுத்து கடந்த ஜூன் 13ல் சந்தித்தோம். எங்கள் பிரச்னைகளையெல்லாம் பொறுமையாகக் கேட்ட அவர், நாங்கள் நடத்தும் போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் கூறினார். இது ஆளுங்கட்சி தரப்புக்கும், கல்வி அமைச்சர் மகேஷுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிரியர்களின் மொத்த ஆதரவையும் தி.மு.க., இழந்து விட்டதாக, அவர்கள் நினைக்கின்றனர். இதனால், எங்கள் சங்கத்தை பிளக்கும் பணியில் இறங்கி விட்டனர். ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக பேச வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ஏற்கனவே எங்கள் சங்க விதிகளை மீறி செயல்பட்டவர்கள். நாங்கள் விஜயை சந்தித்ததை காரணம் காட்டி அவர்கள் வேண்டும் என்றே ஆசிரியர் சங்கத்தில் இருந்து வெளியேறுவது போல நாடகம் நடத்தி உள்ளனர். பின், அவர்கள் அமைச்சர் மகேஷை சந்தித்துள்ளனர். குறிப்பிட்ட அந்த நிர்வாகிகள், புதிதாக ஒரு சங்கத்தை துவக்கி உள்ளனர். கல்வி அமைச்சர் மகேஷ், தன்னுடைய துறையை மேம்படுத்தும் வேலையை விட்டுவிட்டு, சங்கங்களை பிளவுபடுத்தும் வேலையை தான் அதிகம் செய்கிறார். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் வரை ஆசிரியர்களின் போராட்டங்கள் தொடரும் என மாயவன் கூறியுள்ளார்.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி