TET தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! TET Exam | Teachers Protest | DMK Gover
வாக்குறுதியை நிறைவேற்றி எங்களை வாழ விடுங்க முதல்வரே! 2013ம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை. கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் பணி வழங்குவோம் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை பணி வழங்கப்படவில்லை. இதை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும், ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு நியமன தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.