உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல இடங்களில் பூட்டு! மாணவர்கள் தவிப்பு | Education | Schools | JACTTO-GEO | Teachers Protest

பல இடங்களில் பூட்டு! மாணவர்கள் தவிப்பு | Education | Schools | JACTTO-GEO | Teachers Protest

திமுகவின் தேர்தல் வாக்குறுதி உட்பட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டத்தை கையில் எடுத்தது. இது தொடர்பான வழக்கில் ஜாக்டோ ஜியோ போராட்டம், மறியல் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு நடத்திய பேச்சிலும் உடன்பாடு எட்டாததால், அந்த அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்தனர். அதன் படி பெரும்பாலான மாவட்ட தலை நகரங்களில் அரசு ஊழியர்கள் திரண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தன்னிச்சையாக விடுமுறை எடுத்து ஆர்ப்பாட்டத்துக்கு சென்றதால் பல இடங்களில் பள்ளி பூட்டப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் நலன் கருதி சில ஆசிரியர்கள் வந்திருந்தனர்.

பிப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ