/ தினமலர் டிவி
/ பொது
/ நிலத்தை மீட்டுதர கோயில் நிர்வாகிகள் கலெக்டர் ஆபிஸில் மனு! Temple Land Encroachment | Congress | DMK
நிலத்தை மீட்டுதர கோயில் நிர்வாகிகள் கலெக்டர் ஆபிஸில் மனு! Temple Land Encroachment | Congress | DMK
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே எஸ்.துரைசாமிபுரத்தில், பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. காலம்காலமாக கோயில் விழாவின் போது அந்த நிலம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த நிலத்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் ஆக்கிரமித்தாக கூறப்படுகிறது. கோயில் பெயரில் இருந்த பட்டாவை, ஆளும்கட்சி செல்வாக்கை பயன்படுத்தி வேலுச்சாமி வேறு பெயருக்கு மாற்றி உள்ளார். இதை அறிந்த கோயில் நிர்வாகிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் அந்த இடத்தை மீட்டு தரும்படி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மே 19, 2025