உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பக்தர்கள் கடும் அதிர்ச்சி காஞ்சி, திருப்பத்தூரில் பரபரப்பு | Temple theft | kanchipuram

பக்தர்கள் கடும் அதிர்ச்சி காஞ்சி, திருப்பத்தூரில் பரபரப்பு | Temple theft | kanchipuram

ஒரே இரவில் 4 கோயில்களில் சிலைகள், பொருட்கள் திருட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி மேட்டு தெருவில் SSKV பள்ளியின் பின்புறத்தில் கச்சி அநேக தங்காவதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் இந்தகோயிலை நேற்று இரவு ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை அவ்வழியாக சென்ற பக்தர்கள் கோயில் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்றனர். கோவில் கருவறையில் இருந்த சிவன் மற்றும் பார்வதி சிலைகள் மற்றும் உண்டியல் பணம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மோப்பநாய் ஆஸ்கர் வரவழைக்கப்பட்டது. அது கோயில் முழுவதும் மோப்பம் பிடித்தது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

ஆக 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ